பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை..!

136

தேர்தல் முடிவுகள் வருமுன்னே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க, நிதி ஆயோக், முதன்மை அறிவியல் ஆலோசகர் மற்றும் பலதுறைகளின் அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுக்குமாறு பணித்துள்ளார். இந்தச் செயல்திட்டத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிமங்கள், உட்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பதாராளமயம் புகுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.