மக்களவை இறுதிநாள் கூட்டத்தில் பிரதமர் மோடி உருக்கம் !

144

கடந்த 2014-ம் ஆண்டு எதுவுமே தெரியாமல் நாடாளுமன்றத்துக்கு வந்த தாம் தற்போது பல்வேறு புதுமையான அனுபவங்களை பெற்று இருப்பதாக , மக்களவையின் இறுதி நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக பேசினார்.

நடாளுமன்ற மக்களவையின் கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று உறுப்பினர்கள் பலர் பேசிய பின்னர் இறுதியில் பிரதமர் நிறைவுரை ஆற்றினார். அப்போது, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தாம் ஒரு புதுமுகமாக வருகை தந்ததாகவும் நாடாளுமன்றத்தின் அமைப்பு, செயல்பாடுகள் என எதுவுமே தெரியாமல் தாம் வந்ததாகவும் கூறினார். தாம் நாடாளுமன்றத்துக்கு வந்த நாள் முதல் தினந் தோறும் புதுமையான அனுபவங்களை கற்றுக்கொண்டதாகவும் மோடி தெரிவித்தார்.

பெண் உறுப்பினர்களுக்கு தமது வாழத்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த முறை மகளிர் உறுப்பினர்கள் அதிக அளவில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிகப்பதாக தெரிவித்தார். இரண்டு பெண்களை பெரும் பதவிகளில் நாம் அமர்த்தி உள்ளோம் என்றும் நாடு நம்பிக்கையுடன் பொருளாதா ரத்தில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் பிரதமர் கூறினார். நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் தமது அரசு 100 விழுக்காடு உழைத்துள்ளது என்றும் தமது ஆட்சியில் வெளிநாட்டு இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபா டுகள் தமது ஆட்சியில் சீர் செய்யப்பட்தாகவும் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அல்லாத தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. அரசு அமைந்தது என்றும் பிரதமர் கூறினார் .உலகம் முழுவதும் யோகாவை மத்திய அரசு பிரபலபடுத்தியுள்ளது என்றும் டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி அண்டை நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.