சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தியே திறவுகோல் – பிரதமர் மோடி

112

சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தியே திறவுகோல் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் நொய்டாவில் 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு பெட்ரோடெக் – 2109 என்ற மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 95-க்கும் மேற்பட்ட எரிசக்தித் துறை அமைச்சர்கள் மற்றும் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேக் இன் இண்டியா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் நீலச்சுடர் புரட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். எரிபொருள் மற்றும் கேஸ் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, அதனை எதிர்கொள்ளும் நிலைமைக்கு நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். எரிசக்தி துறையில் சிக்கனம், பாதுகாப்பு அவசியம் என்று கூறிய அவர், உற்பத்திக்கு மேலும் நவீன முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.