மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி…

98

உத்திரப்பிரதேச மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோர்த்துள்ளன.இதனால், அம்மாநில அரசியலில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமா% கட்சித் தலைவர் மாயாவதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். நாட்டின் நலன் கருதியே இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும் அப்போது அவர்கள் குறிப்பிட்டனர்.