பா.ஜ.க. முகவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

89

பிரதமர் மோடி அழைப்பின் எதிரொலியால், தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.

நாடுமுழுவதும் பா.ஜ.க.வைச் சேர்ந்த வாக்குச் சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. முகவர்களுடன் நேற்று அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ள பா.ஜ.க., வாஜ்பாய் வழியில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைக்கும் என்றும், இதை நனவாக்க ஒத்த கருத்துடையவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கூறினார்.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி காட்டும் வழிப்படி, தமிழ்நாட்டில் வெற்றிகரமான மெகா கூட்டணி அமைப்போம் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், பா.ஜ.க. அங்கம் வகிக்கும் இந்த கூட்டணி, குறைந்த பட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.