நாட்டு மக்கள் சமூக பாதுகாப்புடன் அடுத்த தலைமுறையினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும் – பிரதமர் மோடி

603

நாட்டு மக்கள் சமூக பாதுகாப்புடன் அடுத்த தலைமுறையினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
43-வது மான் கீ பாத் எனப்படும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, காமன் வெல்த் போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள், மத்திய அரசு வழங்கும் சுத்தமான இந்தியாவுக்கான பயிற்சியில் இணைந்து, அவர்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, உடல் நலத்தை பேணி, பாதுகாக்க யோகா முக்கியமானது என்றும் தெரிவித்தார். தண்ணீரை சேமிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, தண்ணீர் சேமிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்த தலைமுறையினருக்காக, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக சராசரியாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 150 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்தார்.