புற்றுநோய் சிகிச்சைக்காக 15 மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி – பிரதமர் மோடி

1394

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடும் நிதிக்குழுவால் பயன்பெறும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, அடையாறு புற்றுநோய் மைய வைர விழாவில் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் வைரவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, 15வது நிதிக்குழுவின் செயல்பாட்டு வரம்புகள் சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுவதை மறுத்தார். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், முழுமையாக செயல்பட்ட தமிழகம் போன்ற மாநிலங்கள் நிச்சயம் பயன்பெறும் வகையில், நிதிக்குழு நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். புற்றுநோய் சிகிச்சைக்காக 15 மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 10 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார்.