தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி

102

கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதென உறுதியளித்துள்ளார்.
#Modi #India #State #Tamilnadu #PM

தமிழகத்தில் தாண்டவமாடிய கஜா புயலால் தென் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கஜா புயல் காரணமாக நேரிட்டுள்ள நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக பதிவிட்டுள்ளார். மேலும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ள பிரதமர் மோடி, தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க தாம் பிரார்த்தைனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.