இனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி

317

அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #India #MOdi

மும்பையில் ரோந்து பணியை நிறைவு செய்த ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அணு ஆயுதங்களை தடுக்கும் திறன் கொண்ட முதல் அரிஹண்ட் கப்பல் ரோந்து பணியை நிறைவு செய்தது என்று தெரிவித்தார். ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அணு ஆயுத மிரட்டல்களை தடுப்பது அவசியமான ஒன்று என்று கூறிய பிரதமர் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.