ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

755

10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்…

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை இன்று பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஆயிரத்து 200 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையாக செலுத்தும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக் கொண்டு, பிறகு கட்டண ரசீதுகளை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்து செயல்படுவத்துவதன் மூலம் தமிழகத்தில் 2 கோடியே 85 லட்சம் பேர் ஆண்டிற்கு 5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை தகுந்த மருத்துவமனைகளில் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.