பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

290

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில், சீனா – இந்தியா இடையிலான எல்லை விவகாரம், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதானத் தாக்குதல், ஜி.எஸ்.டி. வரி, காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்புக் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.