பாதுகாப்புத்துறை அமைச்சக இணைய தளம் முடக்கம் | முகப்பு பகுதியில் சீன எழுத்துக்கள் இருப்பதால் பரபரப்பு ..!

921

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இணைய தளத்தின் முகப்பு பகுதியில் சீன எழுத்துக்கள் இருப்பதால், இது சீன ஹேக்கர்களின் நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. முடங்கியுள்ள இணைய தளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இணைய தளத்தை முடக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முடக்கப்பட்ட இணைய தளம் விரைவில் சீரமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.