எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திவிட்டதாக குமாரசாமி குற்றச்சாட்டு

217

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திவிட்டதாக குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகா சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளநிலையில், ஐதராபாத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் சித்தராமைய்யா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் புறப்பட்டு, பெங்களுர் வந்தடைந்தனர். இந்த நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திவிட்டதாக குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு போதுமான பலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.