எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில், நடைபெற்ற தி.மு.க. சிறுபான்மை அணியினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் தி.மு.க.மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதை போய்விடும் எனவும் கூறினார்.ஜனநாயகமுறைப்படி ஆட்சி அமைக்கவே தி.மு.க. விரும்புகிறது எனவும் கூறினார்.