18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 2-வது நாளாக இன்றும் நீதிமன்றத்தில் விசாரணை..!

146

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர், முதலமைச்சர் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையை 3வது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தொடங்கினார். 18 எம்.எல்.ஏக்களின் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 பேரை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக கூறினார்.

அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டிருந்த சமயத்தில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் வழக்கறிஞர் ராமன் வாதிட்டார். இந்தநிலையில், இன்றைய விசாரணையின் போது சபாநாயகர், முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட உள்ளனர்.