லோக்பால் அமைப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

169

லோக்பால் அமைப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ளார்.
லோக்பால் மற்றும் கோக் ஆயுக்த சட்டம் 2014ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த பிறகும், பாஜக அரசு இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோன்று, தமிழக அரசும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஊழல் செய்து சொத்து குவித்தவர்களின் வழக்கு விசாரணை பல ஆண்டுகள் தாமதம் செய்வதால்,
அரசியல் கட்சியினர் உட்பட பலர் தப்பிவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, லோக்பால் அமைப்பை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.