திமுக ஆட்சியில் நீர்நிலைகளை தூர்வாரதாது ஏன் என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

244

திமுக ஆட்சியில் நீர்நிலைகளை தூர்வாரதாது ஏன் என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணபேர விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி அரசை கலைக்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் துடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நிலையான அரசு இருக்கவேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். ஊரெல்லாம் சென்று குளங்களை தூர்வாரும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்தபோது இதை செய்ய தவறியது ஏன் என்று தமிழிசை சௌந்தரராஜன் வினவினார்.