பின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது – மு.க.ஸ்டாலின்.

388

பின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் கூறினார். பின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வரவே விரும்புவதாக தெரிவித்தார். மேலும்
ரொம்ப ஆண்டுகள் அல்ல, ரொம்ப மாதங்கள் அல்ல , கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் கூறினார்.