சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையை விடுத்து, தொகுதி மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்-மு.க.ஸ்டாலின்

319

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியின் புதர்களை அகற்றி, தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தூர்வாரியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஏரியை நான் இன்று பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திடீரென்று அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டதாகவும்,
சீரமைக்கப்பட்டிருந்த கரைகளை உடைத்து சேதப்படுத்தி, சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்றுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் அ.தி.மு.க.வினர் இவ்வாறு அராஜக செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடான செயல் என்று கூறிய ஸ்டாலின்,
அராஜகச் செயல்களில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்து சட்டம்–ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையை விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தொகுதி மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.