ஆட்சியை காப்பாற்றி கொள்வது தான் முதலமைச்சரின் ஒரே குறிக்கோள் – மு.க.ஸ்டாலின்

175

வருகிற 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றார். 5 வருடங்களில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என உறுதியளித்த பிரதமர், இதுவரை ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சொன்னவர், செய்தாரா என அவர் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சரோ, பிரதமரோ இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார். தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே குறிக்கோள் என்றும், வரும் 23ம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சி அமைப்பது உறுதி எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.