தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – மு.க.ஸ்டாலின்

72

தமிழ்நாட்டின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என்ற புதிய வியூகத்தை அமைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் மூன்றாம் நாள் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, இள்ளாலூர் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள மைனாரிட்டி அரசுக்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தான் நடத்திவரும் கிராம சபை கூட்டம் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள், அணிவதற்கு தேவையான உடைகள் ஆகியவற்றை கவனித்து வாங்கும் நாம், ஆட்சியாளர்களையும் அதுபோல் தேர்ந்தெடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.