அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்

211

வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால்,அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இறந்த கனகராஜ், மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியன் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர், காமராஜை நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஊழல் வழக்கு விசாரணை தங்கு தடையின்றி நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.