சட்டசபை நிகழ்வுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக குடியரசு தலைவர் உறுதி : மு.க.ஸ்டாலின்

193

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதியளித்ததாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் குறித்து டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டார். இதையடுத்து நேற்று இரவு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டசபையில் கடந்த 18-ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியரசு தலைவர் உறுதியளித்துள்ளதாக கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், கருணாநிதியின் உடல் நலம் குறித்து சோனியா கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.