2016-17-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், வெற்று பட்ஜெட் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

205

2016-17-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், வெற்று பட்ஜெட் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2016-17-ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு. ஒரு லட்சத்து, 20ஆயிரம் கோடியாக இருந்த கடன், தற்போது 2 லட்சத்து, 52ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது மிகவும் வெட்கக் கேடானது என சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கடன் சுமை எப்படி நிவர்த்தி செய்யப்படும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.கடந்த ஆண்டில் அறிவித்த எந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.