ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டைவேடம். | உதய் திட்டத்தால் அரசுக்கு லாபம் என்றால் வரவேற்பு

113

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார் .
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண் வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 4 வாரம் கெடு அளித்தும், மத்திய அரசு அதனை அமைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2 முறை நிராகரித்த, மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் தற்போது மாநில அரசு இணைந்துள்ளதை குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் அதனால் , லாபம் கிடைக்கும் என்றால் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
வறட்சியால் 17 விவசாயிகள் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை ஏற்க முடியாது எனக்கூறிய மு.க.ஸ்டாலின், உரிய கணக்கெடுப்பு நடத்தி, உயிரிழந்த விவசாயிகள் அனைவரும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார் . மேலும், உயிரிழந்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.