ஆதரவு குறைந்து விட்டதா? இல்லையா? என்பது போகபோக தெரியும் – மு.க. அழகிரி

402

கருணாநிதியை மிரட்டி, தன்னை திமுகவில் இருந்து நீக்கியதாக மு.க. அழகிரி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தான் கட்சிக்கு வந்தால், ஆதரவு பெருகும் என முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தன்னை திமுகவில் சேர்க்கவிடாமல் தடுத்து இருக்கலாம் என்று கூறினார். தனக்கு ஆதரவு குறைந்து விட்டதா? இல்லையா? என்பது போக போக தெரியும் என்று கூறிய மு.க.அழகிரி, பொதுக்குழு கூறுபவர்கள் தான் திமுகவா? என்று கேள்வி எழுப்பினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே ஜனநாயகம் இல்லை என கடந்த 2014ஆம் ஆண்டிலேயே குற்றஞ்சாட்டியதாக தெரிவித்த அவர், தன்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால், திமுக மேலும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறினார். இடைத்தேர்தலில் அழகிரி இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.