மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம்….

412

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
11வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் மோதும் இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில், அரையிறுதியின் முதல் இடங்களை பிடிப்பதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று நடைபெற்று வரும் போட்டியில் 23வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்சின் சாதனையை மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.