மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் கோரிக்கை

140

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாதில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், 2017 உலக கோப்பைக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் போட்டி மீது ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்ப வேண்டும் என வலியுறுத்திய மிதாலி ராஜ் போட்டிகளை அதிகளவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.