2017-ம் ஆண்டின் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு!

293

2017-ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
சினாவில் சான்யா நகரில் 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து 118 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மானுஷி சில்லார் இதில் பங்கேற்றார். இவர் இந்தாண்டுக்கான இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட்வர் என்பது குறிப்பிடதக்கது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மானுஷி சில்லார், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். உலகில் யாருக்கு அதிக ஊதியம் தர விரும்புகிறீர்கள் என்று நடுவர்கள் கேட்ட கேள்விக்கு, தாய்க்கு தர விரும்புவதாக கூறி மானுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை தட்டிச்சென்றார்
20 வயதாகும் மானுஷி சில்லார் மருத்துவ படிப்பு பயின்றுவருகிறார். இந்தியாவில் இருந்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் 6வது பெண் மானுஷி சில்லார் ஆகும். 2000-வது ஆண்டு உலக அழகியாக பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.