எய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதாவால் போராடி பெறப்பட்டது – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

381

மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதாவால் போராடி பெறப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில், உலக தாய்ப்பால் வாரத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மாணவிகளால் வரையப்பட்ட வண்ண ரங்கோலி கோலங்களை அமைச்சர் பார்வையிட்ட பின், வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறையில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்றார்.