ஊழலைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

179

ஊழலைப் பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அழகிரியே கருத்து கூறிவிட்ட பின் மு.க.ஸ்டாலின் குறித்து பேச ஒன்றும் இல்லை என விமர்சித்தார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கியது தி.மு.க. தான் என குற்றஞ்சாட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் சாடினார்.