கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து தம்பிதுரை நீக்கம் : புதிதாக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்.

296

அதிமுக அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து தம்பிதுரையை நீக்கம் செய்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து தம்பிதுரை விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு பதிலாக ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வனை கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதாக தினகரன் அறிவித்துள்ளார்.இதேபோன்று, நாகை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் நீக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.