குட்கா விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் தவறுதான் – அமைச்சர் ஜெயக்குமார்

171

குட்கா ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யார் தவறு செய்திருந்தாலும் தவறுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டியளித்த அவர், குட்கா ஊழல் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் தவறு செய்திருந்தாலும் தவறுதான் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மத்திய அரசுக்கு பல்வேறு வகையில் வரி வருமானம் கிடைப்பதாகவும், தமிழக அரசுக்கு ஒரு லிட்டருக்கு வெறும் 16 ரூபாய் மட்டும்தான் வரியாக கிடைப்பதாகவும் தெரிவித்த அவர், இதுபோன்ற வரி வருவாயை வைத்துக் கொண்டுதான் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், 17 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியாக இருந்த திமுக எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.