8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

167

சேலம் – சென்னை 8 வழிச்சாலை, முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேபாளத்தில் சிக்கியுள்ள 23 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். சேலம் – சென்னை 8 வழிச்சாலை, முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் எனக்கூறிய அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மட்டும் தமிழக அரசு உதவி வருகிறது என்றார். இந்த திட்டம், தமிழகத்திற்கு அவசியமானது என்பதால் தான் மத்திய அரசு இதனை கொண்டு வருவதாகவும், மக்கள் மீது எந்த திட்டத்தையும் அரசு திணிக்கவில்லை என அவர் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.