பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்த பின் அனைவரும் பயனடைவார்கள் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

475

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்த பின் அனைவரும் பயனடைவார்கள் என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. ஆனால் கடந்த மே மாதம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறினார். மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்த பின் அனைவரும் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.