தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் விரைவில் | அமைச்சர் கடம்பூர் ராஜு

60

தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் திரைப்படங்களின் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் சிலர் சிறப்புக் காட்சி திரையிட்டுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப் பட்டிருப்பதாகவும், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். அம்மா திரையரங்கம் என்பது மாநகராட்சிக்கு மட்டும்தான் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலனை செய்யும் என அமைச்சர் தெரிவித்தார். திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வெளியிலிருந்து கொண்டு செல்லப்படும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.