ஜெயக்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணம் என யார் சொன்னது? – பொள்ளாச்சி ஜெயராமன்

256

அமைச்சர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட மோதலால் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சந்தித்ததாக யார் சொன்னது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தலைமையில் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திராவிடர் முன்னேற்ற கழகம் டெபாசிட் இழந்ததாக சுட்டிக் காட்டினார். அதிமுகவுக்கு திமுக ஒரு சவால் கிடையாது என கூறிய பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.அழகிரி தனிக்கட்சி துவங்குவது என்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட மோதலால் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சந்தித்ததாக யார் சொன்னது என்று கேள்வி எழுப்பினார்.