அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி – அமைச்சர் செங்கோட்டையன்

183

தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும் ஆங்கில கல்வியை கொண்டுவருவதே அரசின் இலக்கு என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்டம் தோறும் 50 லட்சம் ரூபாய் செலவில் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என குறிப்பிட்டார். அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறிய அவர், தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை கொண்டுவந்து அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.