புயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்

109

கஜா புயல் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி பணிகள் கஜா புயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் . அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்தும், அரசின் வறட்சி நிவாரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.