நாகை மாவட்டம் தலைஞாயிறில் உள்ள விளைநிலத்தில் இறங்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விவசாயி போன்று விதைகளை வீசி உழவுப் பணி செய்தார்.

நாகை மாவட்டம் அடுத்த தலைஞாயிறு கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்துள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இறங்கி விதைகளை தெளித்தார். காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் ஒருவர் விவசாய நிலத்தில் இறங்கி விதை தெளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.