மதுரை அருகே பால் பரிசோதனை சோதனையின் போது 7 பால் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

337

மதுரை அருகே பால் பரிசோதனை முகாமில், சோதனையின் போது 7 பால் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இலவச பால் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரையில் உள்ள பல ஊர்களில் இரண்டாம் கட்ட பால் பரிசோதனை முகாம்கள் தொடங்கியுள்ளன. இந்த முகாமில் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பாக்கெட் பால் மற்றும் வியாபாரிகளிடம் வாங்கிய பால் மாதிரிகளை பெற்று அவற்றை சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மேலூரில் பரிசோதனை முகாமில், 7 பால் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது சராசரியாக பாலில் இருக்க வேண்டிய கொழுப்பு சதவீதமான 3.5 ல் 3 சதவீதம் மட்டுமே சோதனை செய்யப்பட்ட அந்த பால் மாதிரியில் இருந்ததாக கூறப்படுகிறது.