தமிழகத்தில் விரைவில் ஆவின் பாலை துருப்பிடிக்காத டப்பாக்களில் விற்பனை செய்ய முடிவு..!

238

90 நாட்களுக்கு கெடாத வகையில், தமிழகத்தில் விரைவில் ஆவின் பாலை துருப்பிடிக்காத டப்பாக்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் தவிர நெய் மற்றும் குளிர்பானங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் விற்பனை செய்வது போல, ஆவின் பாலை டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான இயந்திரங்கள் 30 கோடி செலவில் இறக்குமதி செய்யப்பட்டு, சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணையில் பொருத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இயந்திரங்களை பொருத்தும் பணி பால் பண்ணையில் நிறைவு பெற்றுள்ளது. இதுபோல, சுகாதாரமானதும், துருப்பிடிக்காததுமான டப்பாக்களில் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதால், 90 நாட்களுக்கு கெடாது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, புதிய டப்பா பால் விலை மற்றும் அதன் விற்பனை தொடக்க விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.