மாயமான விமானத்தை தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என தென்னிந்திய ராணுவத்தளபதி ஜக்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

234

மாயமான விமானத்தை தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என தென்னிந்திய ராணுவத்தளபதி ஜக்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி 29 பேருடன் சென்ற விமானம் வங்கக் கடலில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும்பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் விமானம் குறித்து எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய ராணுவத்தளபதி ஜக்வீர் சிங், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். விமானம் மாயமான பகுதி மிகப்பெரிய கடல் பரப்பளவை கொண்டாதால் தேடும் பணி கடினமாக உள்ளதாக தெரிவித்தார். செயற்கைக்கோள் உதவியுடன் தேடும் முயற்சி நடைபெற்றாலும்,
இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறினார். விரைவில் விமானத்தை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஜக்வீர் சிங் தெரிவித்தார்.


மாயமான விமானம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி 29 பேருடன் சென்ற விமானம் வங்கக் கடலில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும்பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் விமானம் குறித்து எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு கடலோரக் காவல்படை ஐ.ஜி ராஜன் பர்ஹோத்ரா, கடந்த மூன்று நாள்களாக மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளி்ப்பு காரணமாக தேடும் பணியில் சிரமம் இருந்ததாக தெரிவித்தார். நேற்று வானிலை ஒரளவு சீராக இருந்தததால் 40 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவில் தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறிய அவர், இருப்பினும் காணாமல் போன விமானத்தின் அவசரகால இருப்பிடம் அறியும் கருவியிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்று தெரிவித்தார். மேலும், விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அவ்வாறு கிடைத்தால் தேடும் பணி எளிதாக இருக்கும் என்றும் ராஜன் பர்ஹோத்ரா கூறினார்.

இதனிடையே, மாயமான விமானம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மாயமான விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் நாட்டு மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்து இருப்பதாகவும் மக்களவையில் அவர் தெரிவித்தார்.