சீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்

148

டெல்லியில் சீக்கிய ஓட்டுநரையும், அவரது மகனையும் தாக்கிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் மற்றொரு வாகன ஓட்டியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் சரப்ஜித் சிங் என்பவர் வாளால் போலீசாரை விரட்டியடித்தார். இந்நிலையில் அவரைச்சுற்றி வளைத்த போலீசார் சரப்ஜித் சிங்கையும், அவரது மகனையும் சரமாரியாகத் தாக்கினர். போலீசாரின் இந்தச் செயலைக் கண்டித்து டெல்லியின் முகர்ஜிநகர் பகுதியில் ஏராளமான சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.