மஹாராஷ்டிரா மாநிலத்தின் எண்ணெய் தொழிற்சாலையின் ரசாயன தொட்டியை சுத்தம் செய்தபோது, தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

202

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எண்ணெய் தொழிற்சாலையின் ரசாயன தொட்டியை சுத்தம் செய்தபோது, தொழிலாளர்கள் 9பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், லத்தூர் பகுதியில் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள ரசாயன தொட்டியை சுத்தம் செய்ய 9 தொழிலாளர்கள் முயன்றபோது, விஷவாயு தாக்கியதால் மயக்கம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தானநிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.