எம்.ஜி.ஆர் முழுஉருவச் சிலை திறப்பு , அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைத்தார்.

207

இதனையடுத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ராமாவரத்தில் அவரது முழுஉருவ சிலையை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைத்தார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ராமாவரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், சசிகலா கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் இல்ல வாயிலில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். மேலும், அவரது முழு உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காது கேளாதோர் பள்ளி நிகழ்ச்சியை சசிகலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவின்போது, சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 256 காதொலிக் கருவிகளை அவர் வழங்கினார். இதில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.