எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி வைத்த பேனர் அகற்றப்பட்டதால் ஆத்திரம். பழனியில் தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்.

207

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பழனியில் தீபா ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்ற கூறியதால், அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழனி தாராபுரம் சாலையிலுள்ள மானூர் பேருந்து நிலையம் அருகே தீபா ஆதரவாளர்கள் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இந்த பேனரை அகற்றும் படி கீரனூர் போலீசார் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தீபா ஆதரவு அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.