சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, பலூன் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது!

283

சிவகங்கையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, பலூன் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் 18-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஆயுத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவையொட்டி, பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பலூனை பறக்கவிட்டார். நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், அதிகாரிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.