மெக்ஸிகோவில் தேள்களை நகத்தில் ஒட்டவைத்து நகச்சாயம் பூசும் புதிய அழகுபோக்கு இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகிறது.

595

மெக்ஸிகோவில் தேள்களை நகத்தில் ஒட்டவைத்து நகச்சாயம் பூசும் புதிய அழகுபோக்கு இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகிறது.
அமெரிக்காவின் மெக்ஸிகோவில் நடைபெற்ற கைவினை பொருட்களின் கண்காட்சியில் இந்த புதுவிதமான அழகுப்போக்கு அறிமுகமாகி உள்ளது. டுராங்கோ பகுதியை சேர்ந்த அழகுகலை நிபுணரான கார்சியா என்பவர், இதனை உருவாக்கியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த சிறிய ரக தேளினை விரல் நகங்களில் வைத்து அதன் மீது பல வண்ண நகச்சாயங்களை கொண்டு அழகுப்படுத்து கலையின்மீது இளம் பெண்களின் கவனம் திரும்பியுள்ளது. விஷ முறிவுக்காக பயன்படுத்தப்படும் தேளினை விலைக்கொடுத்து வாங்கி இவ்வகையான நக கலைக்கு பயன்படுத்துவதாக அழகுகலை நிபுணர்கள் தெரிவித்தனர். மெக்ஸிகோவில் மின்னல் வேகத்தில் பரவிவரும் இந்த அழகுபோக்கு ஏராளமான இளம் பெண்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.