மெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..!

226

மெக்சிகோவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ, ஆக்சாகா உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. நகரச் சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவின் டெக்சாஸ், சீனாவின் ஹூபி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.